நாட்டில் உள்ள அந்நியத் தொழிலாளர்கள் , உள்ளூரில் விளையும் பச்சரிசையை வாங்குவது தடுக்கப்படாது என்று விவசாயம், விவசாயம் தொழில் சார்ந்த அமைச்சர் முகமட் சாபு தெரிவித்துள்ளார்.
அந்நிய நாட்டவர்களுக்க்கு உள்ளூர் பச்சரிசியை விற்கக்கூடாது என்று பல்வேறு தரப்பினர் கோக்கை விடுத்த போதிலும் இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று முகமட் சாபு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் வேலை செய்து வருகின்ற அந்நிய நாட்டவர்களும் நாட்டின் தேவைக்காக பாடுபட்டு வருகின்றனர் என்பதை மறந்த விட வேண்டாம் என்று முகமட் சாபு அறிவுறுத்தியுள்ளார்.
பச்சரிசி வலையேற்றத்தை தடுக்க அந்நிய நாட்டவர்களுக்கு அவ்வகை அரிசையை விற்பனை செய்யக்கூடாது என்று வலியு றுத்தப்பட்டு வரும் கோரிக்கை தொடர்பில் முகமட் சாபு எதிர்வினையாற்றினார்.








