Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது
தற்போதைய செய்திகள்

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி சம்பந்தப்பட்ட பங்குதாரர் பிரச்சினை தொடர்பான விசாரணையின் முடிவுகளைப் பற்றி விவாதிக்க பொது சேவைத் துறையின் ஒழுங்குமுறை வாரியம் விரைவில் ஒன்று கூடவிருக்கிறது.

தேசிய சட்டத்துறைத் தலைவர் தான் ஸ்ரீ முகமது தசுகி மொக்தார் தலைமையிலான சிறப்புக் குழுவிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் தெரிவித்தார்.

அசாம் பாக்கிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் சில பிரச்சினைகளை விசாரிக்க அரசாங்கம் முன்னதாக சிறப்புக் குழுவொன்றை அமைத்திருந்தது.

இந்த சிறப்புக் குழுவில் கருவூல பொதுச் செயலாளர் டத்தோ ஜோஹான் மஹ்மூத் மெரிக்கான் மற்றும் பொதுச் சேவை இயக்குநர் தான் ஸ்ரீ வான் அகமது டலான் அப்துல் அஜீஸ் ஆகியோரும் உள்ளனர்.

Velocity Capital Partner Sdn Bhd, 17.7 மில்லியன் பங்குகளைக் கொண்டிருப்பது குறித்து தெளிவுபடுத்த அக்குழு கடந்த பிப்ரவரி 19 அன்று அக்குழு கூடியது.

பங்குதாரர் தொடர்பான விஷயங்களை ஆராய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட எந்தவோர் குழுவின் விசராணைக்கும் தாம் தயாராக இருப்பதாக முன்னதாக அசாம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு