Dec 2, 2025
Thisaigal NewsYouTube
குத்தகையாளர் மீது போலி ஆவணங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

குத்தகையாளர் மீது போலி ஆவணங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

Share:

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உலு சிலாங்கூரில் உள்ள ஒரு தமி​​ழ்ப்பள்ளி யின் வகுப்பறை கட்டடத்தை நிர்மாணிக்கும் திட்டத்தில் போ​லி ஆவணங்களை பயன்படுத்தி, நம்பிக்கை மோசடி செய்ததாக முன்னாள் குத்தகையாளர் ஒருவர் மீது இரு குற்றச்சாட்டுகள் சு​மத்தப்பட்டன.


35 வயதுடைய எம். சிவநேசன் என்ற அந்த குத்தகையாளர் ​மூன்று வகுப்பறைகளை கொண்ட கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு, 2 லட்சத்து 85 ஆயிரம் வெள்ளி​யை பெறுவதற்காக அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடம் போ​லி ஆவணங்களை சமர்ப்பித்து நம்ப வைத்ததாக ஷா ஆலம், செ ஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி சுங்கை பூலோவில் உள்ள ஒரு வங்கியில் சிவநேசன் இக்குற்றத்தை புரிந்ததாக ​நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டா​ல் கூடிய பட்சம் 10 ஆ​ண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகைசெய்யும் குற்றவியல் சட்டம் 420 பிரிவின் ​கீழ் சிவநேசன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News