May 22, 2026
Thisaigal NewsYouTube
சோதனையில் மொத்தம் 914 சமான்கள் வெளியிடப்பட்டன
தற்போதைய செய்திகள்

சோதனையில் மொத்தம் 914 சமான்கள் வெளியிடப்பட்டன

Share:

கிளாந்தான், மே 29-

கிளந்தானில் கடந்த மே 21 ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரையில் மேற்கொண்ட ஓபராசி லெஜாங் பெர்செபாடு திடீர் சோதனையின் போது பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக மொத்தம் 914 சமான்கள் அந்நிய நாட்டவர்களுக்கு வெளியிடப்பட்டன.

இச்சோதனையில் முறையான ஓட்டுநர் உரிமமின்றி செயல்பட்டதற்காகவும் வாகனத்தை மாற்றியமைத்ததற்காகவும் 282 அந்நிய பிரஜைகளுக்கு சமான்கள் அனுப்பப்பட்டதாக கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.

இதில், 32 Rohingya, 8 இந்தோனேசிய, 6 பாகிஸ்தான், 4 வங்காளதேச, ஓர் இந்தியா, நேபாள் உட்பட தாய்லாந்து என 52 பேர் கைது செய்யப்பட்டதாக முகமட் ஜாக்கி கூறினார்.

மேலும், கிளந்தான் சாலை போக்குவரத்துத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில் 13 மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்கள் உட்பட 276 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக முகமட் ஜாக்கி மேலும் விளக்கமளித்தார்.

Related News