Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இரு வெளிநாட்டு பெண்களை கடத்தியதாக தம்பதியர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இரு வெளிநாட்டு பெண்களை கடத்தியதாக தம்பதியர் மீது குற்றச்சாட்டு

Share:

சிரம்பான், ஏப்ரல் 29-

இரண்டு வெளிநாட்டு பெண்களை கட்டாய தொழிலாளர்களாக வேலை செய்வதற்கு கடத்தியதாக கணவன், மனைவி இருவர் சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டனர்.

33 வயது எஸ். குமரகுரு மற்றும் அவரின் மனைவி 32 வயது தி. அகதீஸ்வரி ஆகியோர் நீதிபதி சுரிதா புடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு இரண்டு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 12 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் அத்தம்பதியர் குற்றச்சாட்டப்படுவர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரையில் போர்ட்டிக்சன், தாமான் பாயு இந்தேரா லுக்குட்- டில் உள்ள ஒரு வீட்டில் 41 வயது மியான்மார் பெண்ணையும் 21 வயது இந்தியா பெண்ணையும் கட்டாய தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்த கடத்தியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு மே 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்