Jul 27, 2026
Thisaigal NewsYouTube
47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்
தற்போதைய செய்திகள்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

Share:

கடந்து வந்த பாதையில் எத்தனையும் மனிதர்களைச் சந்தித்திருந்தாலும், வாழ்வின் வசந்த காலத்தை ஒன்றாகக் கழித்த பள்ளித் தோழமைகளை மீண்டும் சந்திக்கும் சுகமே தனி. அந்த வகையில், 47 ஆண்டுகால நெடிய நட்புப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக, "உறவுகள் தேடி 1979" வாட்சப் குழுவின் 2026-ஆம் ஆண்டிற்கான மாபெரும் வருடாந்திர ஒன்றுகூடல் நிகழ்வு மிக உணர்ச்சிப்பூர்வமாக, ஒரு வண்ணமயமான 'கலர் ஸ்டோரி' போல அரங்கேறியது.

கடந்த ஜூலை 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில், காப்பார், தாமான் சுங்கை காப்பார் இண்டாவில் உள்ள எஸ்.எம்.வி. வெடிங் மண்டபத்தில் இவ்விழா இனிதே நடைபெற்றது. நாலாபுறமும் சிதறிக்கிடந்த தோழமைகளைத் தேடிக் கண்டுபிடித்து, இத்தனை ஆண்டுகளாக ஒரு தாய்ப் பறவையைப் போலக் கட்டுக்கோப்பாக வழிநடத்தி வருகிறார் புலனக்குழுத் தலைவர் நா. இளங்கோவன். அவரது சிறப்பான ஏற்பாட்டில், விழாவிற்கு வந்திருந்த முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் பொன்னாடைப் போர்த்தி, மாலை அணிவித்து மிக உன்னதமான முறையில் சிறப்பு செய்யப்பட்டது.

அதேவேளையில், தங்களை எல்லாம் ஒன்று சேர்த்த அந்த நல்ல உள்ளத்திற்கு மகுடம் சூட்டும் வகையில், தோழிகள் அனைவரும் ஒன்றிணைந்து தலைவர் நா. இளங்கோவனுக்கு ஒரு உன்னதமான அன்புப் பரிசை வழங்கி ஒட்டுமொத்த அரங்கையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

இவ்விழாவிற்கு, 1974-ஆம் ஆண்டில் காப்பார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் கல்வி போதித்த முன்னாள் ஆசிரியர் செ. தென்னரசு சிறப்பு வருகையளித்துக் கௌரவித்தார். அவர் தனது மாணவர்களுடன் 1974-இல் நடந்த சுவாரசியமான, சுவையான சம்பவங்களை மிக அழகாகப் பகிர்ந்து கொண்டது அங்கிருந்தோரின் நெஞ்சை நெகிழச் செய்தது.

விழாவில் ஆசிரியர் செ. தென்னரசுவுக்குப் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து மாணவர்கள் தங்களின் குரு பக்‌தியை வெளிப்படுத்தினர். விழாவில், எஸ்.எம்.ஜே.கே. மற்றும் சூ ஜின் சீனப்பள்ளிக்கு ஒன்றாகக் கைகோர்த்து நடந்து சென்ற முன்னாள் மாணவர்களின் சென்ற பழைய நினைவுகள் அலை அலையாக மோதின. 16 வயதுத் துள்ளலில் இருந்து இன்று 63 வயதை எட்டியிருந்தாலும், தோழமைகள் அனைவரும் தங்களின் பழைய பள்ளிப்பருவ நினைவுகளை மேடையில் மிகச் சுவையாகப் பகிர்ந்து கொண்டனர். வயது முதிர்ந்த நிலையிலும் தங்களின் நட்பை புதுப்பித்துக் கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்டிருந்த இவர்களின் சந்திப்பு, உண்மையான நட்பிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தது.

விழாவில் ஆசிரியர் செ. தென்னரசுவுக்குப் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து மாணவர்கள் தங்களின் குரு பக்‌தியை வெளிப்படுத்தினர். விழாவில், எஸ்.எம்.ஜே.கே மற்றும் சூ ஜின் சீனப்பள்ளிக்கு ஒன்றாகக் கைகோர்த்து நடந்து சென்ற முன்னாள் மாணவர்களின் சென்ற பழைய நினைவுகள் அலை அலையாக மோதின. 16 வயதுத் துள்ளலில் இருந்து இன்று 63 வயதை எட்டியிருந்தாலும், தோழமைகள் அனைவரும் தங்களின் பழைய பள்ளிப்பருவ நினைவுகளை மேடையில் மிகச் சுவையாகப் பகிர்ந்து கொண்டனர். வயது முதிர்ந்த நிலையிலும் தங்களின் நட்பை புதுப்பித்துக் கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்டிருந்த இவர்களின் சந்திப்பு, உண்மையான நட்பிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்ப... | Thisaigal News