Jul 27, 2026
Thisaigal NewsYouTube
8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

Share:

தொழிலதிபர் ஒருவரைக் கடத்தி, அவரை விடுவிக்க 8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகையைக் கோரியதாக 6 ஆடவர்கள் இன்று பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டனர்.

45 வயது ஏ. ரவிச்சந்திரன், 45 வயது ஆர். இளங்கோவன், 43 வயது எம். ஜெயராஜ், 40 வயது மோசஸ் டி பிரெட்டோ ஜான் பேட்ரிக், 33 வயது சியாவுதீன் மற்றும் 36 வயது முகமது அஃபிக் சஃபின், ஆகிய அந்த அறுவருக்கு எதிராக இந்த கடத்தல் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

கடந்த ஜூலை 16-ஆம் தேதி, டத்தாரான் சன்வேயிலுள்ள ஒரு நாசி கண்டார் உணவகத்தில் 44 வயது சுய் கோக் மூன், என்ற தொழிலதிபரை 8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு கடத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி விதிக்க வகை செய்யும் குறறிவியல் சட்டத்தின் கீழ் இந்த அறுவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

அறுவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிய வேளையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி டாக்டர் ஷஹ்லிசா வர்நோ , வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். முன்னதாக, கடத்தப்பட்ட தொழிலதிபர் ஜூலை 18 அன்று ஷா ஆலமில் உள்ள ஒரு குடியிருப்பில் நள்ளிரவு 1 மணியளவில் போலீசாரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

மலாக்கா: மீன் தோல் எனக் கூறி 83.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சுறா துடுப்புகளைக் கடத்த முயன்ற முயற்சி முறியடிப்பு

மலாக்கா: மீன் தோல் எனக் கூறி 83.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சுறா துடுப்புகளைக் கடத்த முயன்ற முயற்சி முறியடிப்பு

சுலங்கூர் சுற்றுலாத்துறை வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையில் 2026 சுலங்கூர் சுற்றுலாப் பயணக் கண்காட்சி கோலாகலமாகத் தொடக்கம்

சுலங்கூர் சுற்றுலாத்துறை வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையில் 2026 சுலங்கூர் சுற்றுலாப் பயணக் கண்காட்சி கோலாகலமாகத் தொடக்கம்