Aug 7, 2026
Thisaigal NewsYouTube
புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!
தற்போதைய செய்திகள்

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

Share:

புகழ்பெற்ற கத்தோலிக்க புனிதத் தலங்களில் ஒன்றான பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் அமைந்துள்ள புனித அன்னம்மாள் பேராலயத்தின் ஆண்டுத் திருவிழா நேற்று மிகக் கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆண்டு முக்கியத் திருவிழா வார இறுதியில் அமைந்ததால், மலேசியா, சீனா, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பேராலயத்தில் திரண்டனர்.

10 நாட்கள் நடைபெற்ற நவநாள் திருப்பலிகளைத் தொடர்ந்து, நேற்று காலையில் நான்கு மொழிகளில் சிறப்புத் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. இதில் காலை 11 மணிக்கு நடைபெற்ற தமிழ் மொழித் திருப்பலியில் மட்டும் 10,000-க்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு 8.30 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி புனிதரின் திருவுருவப் பவனியில் பங்கேற்றனர்.

நம்பிக்கையின் சிந்தைனைகளால் இணைந்து கொண்டாடுவோம், கேட்போம், நடப்போம்" என்ற கருப்பொருளில் நடைபெற்ற இத்திருவிழா குறித்து அருள்பணியாளர் லாசரஸ் ஜொனாதன் கூறுகையில், "அனைத்து பக்தர்களும் பாதுகாப்பாக வந்து, இறையருளுடன் நலமாகத் தங்கள் இல்லங்களுக்குத் திரும்ப வேண்டும் என்பதே எங்களின் பிரார்த்தனை.

இனம், மதம் என்ற வேறுபாடின்றி அனைவருடனும் இணைந்து பயணிப்பதும், மக்களின் துயரங்களைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளிப்பதுமே திருச்சபையின் நோக்கம். இந்த ஆண்டு சிறப்புப் பிரார்த்தனைகள் கிறிஸ்துவ மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது; ஏனெனில் நம்பிக்கை என்பது அனைவருக்கும் பொதுவான செய்தி" என்றார். மேலும், குடும்ப ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், "குடும்பங்கள் வலுவாக இருந்தால் நாடு நிலைத்திருக்கும்; உலகமும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக மாறும்" என்று தனது செய்தியில் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி