Nov 20, 2025
Thisaigal NewsYouTube
திருமணம் ஆகாமலேயே 16,951 பெண்கள் தாய்மை அடைந்துள்ளனர்
தற்போதைய செய்திகள்

திருமணம் ஆகாமலேயே 16,951 பெண்கள் தாய்மை அடைந்துள்ளனர்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.20-

கடந்த நான்கு ஆண்டுகளில் 19 வயதுக்கு கீழ்பட்ட 16 ஆயிரத்து 951 பெண்கள் திருமணம் ஆகாமலேயே தாய்மை அடைந்துள்ளனர் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ நான்சி ஷுக்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை சுகாதார அமைச்சு பதிவு செய்துள்ள தரவுகளின்படி இந்த எண்ணிக்கை தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

திருமணம் ஆகாமலேயே பெண்கள் தாய்மையடையும் இப்பிரச்னையைக் களைவதற்கு தமது தலைமையிலான மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் நான்சி ஷுக்ரி இன்று மக்களவையில் தெரிவித்தார்.

இது போன்று பாதிக்கப்படும் பெண்களுக்கு நல்லுரை வழங்குதல், சுகாதாரக் கல்வியை போதித்தல், சமூகத்தின் அரவணைப்பை ஏற்படுத்துதல் முதலிய அணுகுமுறைகளைக் கையாண்டு வருவதாக நான்சி ஷுக்ரி குறிப்பிட்டார்.

Related News