Jun 30, 2026
Thisaigal NewsYouTube
பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்
தற்போதைய செய்திகள்

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

Share:

பொதுமக்களிடையே அச்சம் அல்லது பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் கருத்து வெளியிட்டதாக சமூக செயற்பாட்டாளர் ஆறுமுகம் துரைசாமி என்ற இயற்பெயரைக் கொண்ட அருண் துரைசாமி மீது ஜாவி நீதிபதி நீதிமன்றத்தில் இன்று குற்றம்சாட்டப்பட்டது.

56 வயதான ஆறுமுகம் துரைசாமி, நீதிபதி நூருல் ஐனா அகமது முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக்கு கோரினார்.

கடந்த ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி, பிற்பகல் 3.45 மணியளவில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட கருத்து ஒன்றின் அடிப்படையில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அந்த கருத்து பொதுமக்களில் அச்சத்தை ஏற்படுத்தியதுடன், பொது ஒழுங்குக்கு எதிரான செயல்களை தூண்டியதாக குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கானது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிடுதல் தொடர்பான குற்றச்சாட்டாக குற்றவியல் சட்டம் பிரிவு 505(b) -இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு