Dec 3, 2025
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் வழக்கில் இருவர் தூக்கிலிருந்து தப்பினர்
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் வழக்கில் இருவர் தூக்கிலிருந்து தப்பினர்

Share:

போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இருவர் அந்த தண்டனையிலிருந்து இன்று தப்பினர். எனினும் தூக்குத் தண்டனைக்கு பதிலாக அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

37 வயது சௌ கும் யுவன் என்பவருக்கு 18 ஆண்டு சிறை மற்றும் 20 பிரம்படித் தண்டனை மற்றும் 31 வயது எஸ். இந்திரனுக்கு 12 ஆண்டு சிறை மற்றும் 10 பிரம்படித் தண்டனை விதிப்பதற்கு புத்ரா, ஜெயா கூட்டரசு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.

அவர்கள் கடத்திய போதைப்பொருள் அளவு குறைக்கப்பட்டு, குற்றச்சாட்டில் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தூக்குத் தண்டனைக்கு பதிலாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Related News