Sungai Buloh R&R ஓய்வுத் தளத்தில் மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் பிரபல நடிகர் ஒருவர், வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்படுவார் என்று சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் Hussein Omar Khan தெரிவித்துள்ளார்.
29 வயதுடைய அந்த நடிகர் குற்றவியல் சட்டம் 323 பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று Hussein Omar குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட நடிகரை மார்ச் 13 ஆம் தேதி கோல குபு பாரு நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டுவதற்கு உத்தரவு கிடைத்திருப்பதாக அந்தப் போலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.








