உடல் ஊனமுற்ற தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய மாதாந்திர அலவன்ஸ் உதவித்தொகையைப் பெறுவதற்குப் போலி சம்பள சூராவைப் பயன்படுத்தி கடந்த பத்தாண்டு காலமாக ஏமாற்றி வந்த நபரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான sprm கைது செய்துள்ளது.
39 வயதுடைய அந்த நபர் நேற்று பிற்பகல் 12 மணியளவில் சிரம்பானில் உள்ள sprm அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணைத்தின் தகவல்கள் கூறுகின்றன.
சம்பந்தப்பட்ட நபர், உயர்ந்த சம்பளத்தைக் கொண்டிருப்பதால் அரசாங்கத்தின் உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர் தகுதி பெறவில்லை. இதன் காரணமாக அவர், குறைந்த சம்பளத்தைப் பெறுவதைப் போன்று போலியாக தயாரிக்கப்பட்ட சம்பள சூராவைப் பயன்படுத்தி, கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து, உடல் ஊனமுற்ற தொழிலாளர்களுக்கான மாதாந்திர அலவன்ஸ் தொகையைப் பெற்று ஏமாற்றி வந்ததாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு ஏதுவாக அந்த நபரை, 5 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்க seremban majistret நீதிமன்றம், sprm மிற்கு இன்று அனுமதி அளித்தது.








