Mar 16, 2026
Thisaigal NewsYouTube
லைசன்ஸ் இல்லாமல் டீசல் வைத்திருந்த லாரி ஓட்டுநர்
தற்போதைய செய்திகள்

லைசன்ஸ் இல்லாமல் டீசல் வைத்திருந்த லாரி ஓட்டுநர்

Share:

மலாக்கா,ஜன.31
கடந்த ஆண்டு, லைசன்ஸ் இல்லாமல் 3 ஆயிரத்து 25 லிட்டர் டீசலை உரிய லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஒன்றில் வைத்திருந்தாக லாரி ஓட்டுநர் ஒருவர் மீது மலாக்கா, ஆயேர் கெரோ செஷன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி, காலை 11.00 மணி அளவில், மலாக்கா, பாச்சாங்ஙில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் 24 வயது ஜேசன் எங் காய் சொங் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.

நீதிமன்றத்தில் அக்குற்றத்தை ஜேசன் மறுத்துள்ளார்.

8 ஆயிரம் வெள்ளி ஜாமினில் ஜேசன் விடுவிக்கப்படவும் எதிர்வரும் மார்ச் 20 ஆம் தேது இந்த வழக்கு மறு விசாரணைக்கு வருவதாகவும் நீதிபதி டர்மாஃபிக்ரி அபு அடாம் தீர்ப்பளித்தார்.

Related News