உறவினர்கள் என்று நம்பப்படும் மியன்மார் பிரஜைகளுக்கு இடையில் நிகழ்ந்த வாய் சண்டை கைக்கலப்பாக மாறியதில் 29 வயது ஆடவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் உலு சிலாங்கூர், Kalumpang, Kampung Sungai Serian, Ladang Sungai Gumut என்ற இடத்தில் நிகழ்ந்தது.
சம்பந்தப்பட்ட மியன்மார் பிரஜை குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டுப்பிடிக்கப் பட்டதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலிஸ் தலைவர் Muhamad Asri Muhamad Yunus தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கொலையுண்ட ஆடவருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்ததாக நம்பப்படும் 3 ஆடவர்களைப் போலீசார் கைது செய்திருப்பதாக Muhammad Asri குறிப்பிட்டார்.








