Jul 27, 2026
Thisaigal NewsYouTube
17 வயது மாணவனுடன் ஆசிரியை காதல் ஆசிரியர் நன்னெறி கோட்பாட்டிற்கு முரணானது
தற்போதைய செய்திகள்

17 வயது மாணவனுடன் ஆசிரியை காதல் ஆசிரியர் நன்னெறி கோட்பாட்டிற்கு முரணானது

Share:

சிப்பாங், மார்ச் 25.

தன்னிடம் பயின்று வரும் 17 வயது மாணவன் ஒருவனுடன் இடைநிலைப்பள்ளி ஆசிரியை பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது, மிகப்பெரிய தவறாகும் என்று தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமான NUTP தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட ஆசிரியையின் செயல், புனித மிக்க ஆசிரியர் தொழில்துறை நன்னெறி கேட்பாட்டிற்கு முரணானதாகும் என்று NUTP-யின் பொதுச் செயலாளர் பவுஜி சிங்கோன் தெரிவித்தார்.

ஆசிரியர் தொழில் துறையை சேர்ந்த ஒருவர் மாணவனுடன் காதல் வலையில் விழுந்து, தகாத உறவில் ஈடுபட்டு இருக்கும் சம்பவத்தை தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் கடுமையாக கருதுவதாக பவுஜி சிங்கோன் குறிப்பிட்டார்.

ஆசிரியர்கள் தொடர்பாக பல்வேறு புகார்களை NUTP பெற்று வந்த போதிலும் மாணவனுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டை அறவே ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று பவுஜி சிங்கோன் தெரிவித்தார்.

ஆசிரியைக்கும் மாணவனுக்கும் இடையிலான தகாத உறவை அனுமதிப்போமானால் அது நாளடைவில் மாணவர், விரிவுரையாளர், மருத்துவர், நோயாளி என்ற நிலையில் தகாத உறவுக்கு வித்திடும் என்று அவர் குறிப்பிட்டார்.

சிப்பாங்கில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை ஒருவர், அப்பள்ளியில் பயிலும் 17 வயதுடய தனது மகனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு வருவதாக 46 வயது மாது ஒருவர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து இவ்விவகாரத்தை சிப்பாங் மாவட்ட போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்