Jul 27, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாக இருவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

போலீஸ் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாக இருவர் மீது குற்றச்சாட்டு

Share:

மலாக்கா, ஏப்ரல் 16-

மூத்த காவல்துறை அதிகாரிக்கு 60,000 வெள்ளி லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்ததாக இரு நபர்கள் அயர் கெரோஹ் செசியன் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டனர்.

குற்றச்சாட்டப்பட்டுள்ள 26 வயது டியோ டெக் கிங் மற்றும் 19 வயது கியோங் கா வை ஆகிய இருவரும் நீதிபதி எலசபெட் பாயா வான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சட்டம் 2009 - யின் 17(6) மற்றும் 24 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் அவ்விருவரும் குற்றச்சாட்டப்படுவர்.

மோசடி நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் தங்களின் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு கடந்த ஆண்டு, மலாக்கா தெங்கா மாவட்ட காவல் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கு 60,000 வெள்ளி லஞ்சம் கொடுத்ததாக அவ்விருவரும் குற்றச்சாட்டப்பட்டுள்ளனர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்