Oct 10, 2026
Thisaigal NewsYouTube

24 மணி நேரத்திற்குள் தகவல் மக்களைச் சென்றடைய வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
24 மணி நேரத்திற்குள் தகவல் மக்களைச் சென்றடைய வேண்டும்

லுமுட், ஜூன்.15-

அரசாங்கத்தின் முக்கியக் கொள்கைகள் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள், தகவல் தொடர்புத் துறை அத்தகவல்களை மக்களுக்குக் கொண்டுச் சேர்க்க வேண்டும் எனத் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 1,878 மடானி சமூகங்களுக்கும் துல்லியமான, நம்பகமான, விரைவான தகவல்கள் சென்றடைவதை உறுதிச் செய்யலாம் என்றார்.

மடானி சமூகங்கள் நம்பகமான தகவல்களைப் பெறுவதில் முதல் குழுவாக இருப்பதைத் தகவல் தொடர்புத் துறை உறுதிச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சமூக ஊடகங்களை ஒரு முதன்மைக் கருவியாகப் பயன்படுத்தி, தவறான, பொய்யான தகவல்களைத் தடுத்து, சமூக நல்லிணக்கத்தையும் நாட்டின் இறையாண்மையையும் இந்த நடவடிக்கை பாதுகாக்க உதவும் என்றார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →