Jul 16, 2026
Thisaigal NewsYouTube
வழிப்பாட்டுத்தலம் அருகே பயங்கர தாக்குதல் – ஒருவர் கவலைக்கிடம்; 5 பேர் கைது
தற்போதைய செய்திகள்

வழிப்பாட்டுத்தலம் அருகே பயங்கர தாக்குதல் – ஒருவர் கவலைக்கிடம்; 5 பேர் கைது

Share:

மலாக்கா மாநிலம், கம்பங் பெங்காலான் ராமா பாந்தாய் பகுதியில் உள்ள ஜாலான் பெங்காலான் சாலையில் உள்ள வழிபாட்டுத்தலம் அருகே இன்று அதிகாலை நடந்த தாக்குதலில் இருவர் படுகாயமடைந்தனர்.

அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிகாலை 1 மணியளவில், 41 மற்றும் 46 வயதுடைய இருவர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த தங்களது மோட்டார் சைக்கிளை எடுக்க வந்த போது, ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று அவர்களைத் தாக்கியதாக மலாக்கா தெங்கா மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் ஹாலிம் அபாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் ஒருவருக்கு நெற்றி மற்றும் தாடைப் பகுதியில் ஆழமான காயங்களும், மற்றொருவருக்கு மண்டை ஓடு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 5 உள்ளூர் ஆடவர்களை போலீஸ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related News