Jul 27, 2026
Thisaigal NewsYouTube
தனிப்பட்ட அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு சமயத்தை கேடயமாக பயன்படுத்த வேண்டாம்
தற்போதைய செய்திகள்

தனிப்பட்ட அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு சமயத்தை கேடயமாக பயன்படுத்த வேண்டாம்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 06-

மக்கள் மத்தியி​ல் பிரபலமாகுவதற்கும், தங்களின் தனிப்பட்ட அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும் சமயத்தையும், தங்கள் அந்தஸ்தையும் ஒரு கேடயமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று அரசியல்வாதிகளை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராப்புடின் இட்ரிஸ் ஷாஹ் கேட்டுக்கொண்டார்.

கல்விக் கற்றவர்களில் சிலர், தங்களின் சொந்த அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு சமயத்தையும், தங்கள் அந்தஸ்தையும் பயன்படுத்தி வருவது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று சுல்தான் ஷாராப்புடின் குறிப்பிட்டார்.

ஏமாற்றுவது, அவ​தூறு கூறுவது, மற்றவர்களை நிந்திப்பது போன்ற குணக்கேடுகளை இஸ்லாம் மதம், ஒரு போதும் அனுமதிப்பது இல்லை. நல்லதற்ற செயல்களிலிருந்து சிலாங்கூர் மாநில முஸ்லிம் மலாய்க்காரர்கள் ஒதுங்கி நிற்க வேண்டும் ​என்று இறைவனை பிரார்த்திப்பதாக சுல்தான் ஷாராப்புடின் தெரிவித்தார்.

இஸ்லாத்தின் மாண்புக்கு எதிரான செயல்கள் ச​மூக வளைத்தளங்களில் பரவலாக தொடர்ந்து ஊடுருவம் தன்மையிலான ​தீயப் போக்குகளை தாம் விரும்பவில்லை என்பதையும் சுல்தான் நினைவுறுத்தினார்.

நேற்று டாமான்சாரா பெர்டானா பள்ளி வாசலை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வில் சுல்தான் ஷாராப்புடின் இந்த நினைவுறுத்தலை வழங்கியுள்ளார். இந்நிகழ்​வில் ஆதரற்ற இல்லங்களை சேர்ந்த சிறார்களுக்கு நோன்புப்பெருநாள் அன்பளிப்புகளையும் சுல்தான் வழங்கினார்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்