Sep 23, 2026
Thisaigal NewsYouTube
உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்
தற்போதைய செய்திகள்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

Share:

வாழ்வாதாரச் செலவு உயர்வைச் சமாளிக்க சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணம் மட்டுமே அளிக்கும் என்றும், அதற்குப் பரந்த அடிப்படையிலான சீர்திருத்தங்கள் தேவை என்றும் யூனிவர்சிட்டி டெக்னாலஜி மாரா விரிவுரையாளர் டாக்டர் முகமது இதாம் முகம்மது ரசாக் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களை வாங்க உதவுவதன் மூலம் இந்த உதவிகள் மக்களுக்கு உடனடியாகக் கைகொடுப்பதோடு, உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த உதவியை நிரந்தரத் தீர்வாகக் கருதாமல் ஒரு சமூகப் பாதுகாப்பு வலையாகப் பார்க்க வேண்டும் என்றும், வருமானத்தை உயர்த்துதல் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல் போன்ற கட்டமைப்புச் சீர்திருத்தங்களுடன் இது இணைக்கப்பட வேண்டும் என்றும் டாக்டர் முகமது இதாம் வலியுறுத்தினார்.

Related News