Mar 16, 2026
Thisaigal NewsYouTube
பெர்சத்து கட்சிக்குத் துரோகம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
தற்போதைய செய்திகள்

பெர்சத்து கட்சிக்குத் துரோகம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

Share:

கோலாலம்பூர்,ஜன.30
கட்சிக்குத் துரோகம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட பெர்சத்துவின் உச்சமன்ற முடிவு செய்துள்ளது.

அவ்வாறு நடந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவதே நல்லது எனவும், அத்தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலை பெர்சத்து கட்சி சந்திக்கத் தயாராக இருக்கிறது எனவும் அதன் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்துப் போராட பெர்சத்து கட்சி தயாராக இருக்கின்ற எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பெர்சத்து கட்சியை புதுப்பிக்கும் வகையில், அதன் உச்சமன்ற உறுப்பினர்களாக சில நியமிக்கப்பட்டுள்ளனர். பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அஸ்மான் நஸ்ருடின், தாமான் மேடான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.அஃபிஃப் பாஹர்டின்,ஶ்ரீகான்டி மலேசியாவின் துணைச் செயலாளர் டத்தோ நொலி அஷிலின் முஹமாட் ரட்சி ஆகியோர் பெர்சத்து கட்சியின் உச்சமன்றத்தில் தற்போது புதிதாக இடம்பெறுகின்றார்கள்.

அதே சமயம், மாநில நிலையிலும் சில தலைமைத்துவ மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.

Related News