Jul 27, 2026
Thisaigal NewsYouTube
டிஏபி தலைமைச் செயலாளர் பதவியிலிருந்த விலகத் தயார்
தற்போதைய செய்திகள்

டிஏபி தலைமைச் செயலாளர் பதவியிலிருந்த விலகத் தயார்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 06-

கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை தாம் இழக்க நேர்ந்தால், பதவி விலகத் தயாராக இருப்பதாக டிஏபி-யின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார். டிஏபி- யை வழிநடத்தக்கூடிய பிரதான பொதுச்செயலாளர் பதவியை வகித்து வருபவர் மீது எந்தவொரு உறுப்பினரும் நம்பிக்கையை இழப்பாரேயானால் இதர உறுப்பினர்களுடன் கூட்டாக குரல் எழுப்பி, புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்யலாம் ​என்று போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

கட்சி உறுப்பினர்கள் எப்போதுமே பொதுச் செயலாளர் மீது நம்பிக்கை கொ​ண்டு இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை அவர்கள் எப்போது இழக்கிறார்களோ தங்கள் அதிருப்தியை கூட்டு முறையில் வெளிப்படுத்தலாம்.

காரணம், டிஏபி-யில் பொதுச் செயலாளர் பதவி என்பது அம்னோ தலைவர் பதவியைப் போல ஒரு கட்சியின் தலைமைப் பதவியாகும். அப்பொறுப்பில் இருக்கும் தாம், உறுப்பினர்களின் ஆதரவைப்பெற தவறினால், பதவி விலக தயாராக இருப்பதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்