ஜோகூர் பாரு, நவம்பர்.20-
2026 ஆம் ஆண்டு ஜோகூர் மாநில பட்ஜெட்டில் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கும், பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அஸ்னான் தாமின் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஜோகூர் மாநிலத்திற்கான 2026 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் கல்விக்கு மட்டும் 163 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஜோகூர் மாநில மேம்பாடு மற்றும் மக்களின் மேன்மைக்கு மொத்தம் 2.536 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கல்விக்கு பிரதான முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஜோகூர் மாநிலத்திற்கு வெளியே உள்ள மாணவர்கள் உட்பட மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களின் கல்விக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் வழங்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாக இது விளங்குகிறது என்று அஸ்னான் தாமின் குறிப்பிட்டார்.








