May 22, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் பேருந்து ஓட்டுநர் காயமடைந்த வேளை, பயணிகள் உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

விபத்தில் பேருந்து ஓட்டுநர் காயமடைந்த வேளை, பயணிகள் உயிர் தப்பினர்

Share:

குவாந்தான், மே 28-

குவாந்தான், கிழக்கு கரையோர நெடுஞ்சாலை (LPT1) - ரில் விரைவு பேருந்து ஒன்று லாரியுடன் விபத்துக்குள்ளாகியதில் அப்பேருந்து ஓட்டுநர் பலத்த காயங்களுக்கு ஆளாகிய வேளை, அதில் பயணித்த 37 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இன்று நள்ளிரவு 1 மணியளவில் நெகிரி செம்பிலான், நீலாயிலிருந்து கோலா திரங்கானு - விற்கு 40 வயது அப்பேருந்து ஓட்டுநர் ஓட்டிச் சென்ற பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறத்தில் மோதியதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.

விபத்தில் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநருக்கு கை கால்களில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் தேங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக வான் முகமட் ஜஹாரி கூறினார்.

இச்சம்பவத்தின் போது எந்தவொரு காயமுமின்றி உயிர் தப்பித்த 37 பயணிகளும் மாற்றுப் பேருந்தில் திரெங்கானுவிற்கு அவர்களின் பயணத்தை தொடர்ந்ததாக வான் முகமட் ஜஹாரி மேலும் விளக்கமளித்தார்.

Related News