ஓன்லைன் மூலம் பாலியல் தொல்லைகளை எதிர்நோக்கி வரும் பெண்கள், அவை குறித்து அமலாக்கத் தரப்பினரிடம் புகார் அளிக்கும்படி மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் அய்மான் அதிரா சாபு கேட்டுக்கொண்டார்.
சமூக வலைத்தளங்களில் உள்ள நவீன தொடர்பு கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி பெண்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பாலியல் தொல்லைகள் தொடர்பான புகார்களின் எண்ணிக்கை தொடர்ந்த அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தப் புகார்கள் தொடர்பாக தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணையம் போன்ற அமலாக்கத் தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு அவர்களிடம் இப்புகார்கள் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று பெண்களுக்கு அய்மான் அதிரா துணை அமைச்சர் ஆலோசனைக் கூறினார்.








