May 22, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தான் உறுப்பினர் ஷாருல் ஏமா கைது செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பெரிக்காத்தான் உறுப்பினர் ஷாருல் ஏமா கைது செய்யப்பட்டார்

Share:

பெரிக்காத்தான் நேஷனல் உறுப்பினரும், சமூக வலைத்தள உள்ளடக்கங்களை உருவாக்குபவருமான ஷாருல் ஏமா ரேனா அபு சாமாவை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

Ratu Naga என்று சுருங்க அழைக்கப்படும் அந்தப் பெண்மணி, இன்று காலை 9.00 மணியளவில் Jalan Klang Lama-வில் உள்ள அவரின் வீட்டில் எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் நபீலா கைருடின் தெரிவித்துள்ளார்.

ஷாருல் ஏமா, எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. விளக்கம் கோருவதற்கு எஸ்பிஆர்எம் தலைமையகத்தை நோக்கி தாம் சென்று கொண்டு இருப்பதாக நபீலா கைருடின் குறிப்பிட்டுள்ளார்.

Related News