Oct 10, 2026
Thisaigal NewsYouTube

580 முறை இரத்த தானம் செய்து 'மெடல் ஃபோர் லைஃப்' விருதைப் பெற்ற முதல் பெண்மணி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
580 முறை இரத்த தானம் செய்து 'மெடல் ஃபோர் லைஃப்' விருதைப் பெற்ற முதல் பெண்மணி

கோலாலம்பூர், ஜூன்.14-

580 முறை இரத்த தானம் செய்து மெடல் ஃபோர் லைஃப் எனும் வாழ்நாள் பதக்கத்தைப் பெற்ற நாட்டின் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார் 65 வயது சின் ஜெக் லெங். தனது தாயாருக்கு O+ வகை இரத்தம் தேவைப்பட்டதால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட இரத்த இழப்பை ஈடுகட்ட பற்றாக்குறையை எதிர்கொண்ட சின் ஜெக் லெங், அதன் பிறகு தீவிர இரத்த தானம் செய்பவராக மாறினார்.

தனது தாய்க்கு ஏற்பட்டது போல் மீண்டும் நிகழாமல் இருக்க, ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தேசிய இரத்த மையத்திற்குச் சென்று இரத்த தானம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் இவர். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக இரத்த தானம் செய்து வரும் இவர், இதுவரை 580 முறை இரத்த தானம் செய்துள்ளார். இந்த அசாதாரண சாதனைக்காக, மெடல் ஃபோர் லைஃப் எனும் வாழ்நாள் பதக்கத்தைப் பெற்ற நாட்டின் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →