Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கால அவகாசத்தை நீட்டிக்க எஸ்.பி.ஆர்.எம் அனுமதி
தற்போதைய செய்திகள்

கால அவகாசத்தை நீட்டிக்க எஸ்.பி.ஆர்.எம் அனுமதி

Share:

சொத்து விவரங்களை அறிவிக்கும் விவகாரத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் விசாரணை வளையத்திற்குள் இருந்து வரும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் இரண்டு புதல்வர்கள் தங்கள் சொத்து விவரங்களை அறிவிப்பதற்கான கால அவகாசத்தை எஸ்.பி.ஆர்.எம் மேலும் நீடித்துள்ளது.

மொக்ஸானி மகாதீர் மற்றும் மிர்சான் மகாதீர் ஆகியோரின் வழக்கறிஞர்கள், எஸ்.பி.ஆர்.எம்- முடன் தொடர்பு கொண்டு கால அவகாசத்தை நீட்டிக்கும்படி விண்ணப்பித்துள்ளதாக அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த கால அவகாச நீட்டிப்பு, எவ்வளவு காலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை அஸாம் பாக்கி வெளியிடவில்லை.

Related News