May 22, 2026
Thisaigal NewsYouTube
வெ. 345,000 மதிப்பிலான 69 மாடுகள் கைப்பற்றப்பட்டன
தற்போதைய செய்திகள்

வெ. 345,000 மதிப்பிலான 69 மாடுகள் கைப்பற்றப்பட்டன

Share:

வருகின்ற திங்கட்கிழமை Haji பெருநாளை முன்னிட்டு, மாடுகளை விற்பதற்காக மொத்தம் 69 மாடுகளை கடத்த முயற்சித்த இருவரின் நடவடிக்கைகளை மலேசிய இராணுவப் படை மற்றும் மலேசிய போலீஸ் படை அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்தனர்.

நேற்று இரவு 8.20 மணியளவில் மலேசியா - தாய்லாந்து எல்லையில் உள்ள காட்டுப் பகுதியில் சந்தேகிக்கும் 29 மற்றும் 37 வயதுடைய அவ்விரு ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதில் 345,000 மதிப்பிலான 69 மாடுகள் உட்பட 1.345 மில்லியன் மதிப்புள்ள இரண்டு டிரெய்லர்களும் கைப்பற்றப்பட்டன. மேல் நடவடிக்கைகளுக்காக அவ்விருவரும் Lalang Pepuyu காவல் நிலையம் மற்றும் Kelantan கால்நடை சேவைத்துறையின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Related News