தனது 12 வயது மகனை அடித்து , உதைத்து காயப்படுத்தியதாக தந்தை ஒருவர், கெரிக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
37 வயதான அந்த நபர், கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி மாலை 5 மணியளவில் பேரா, கிரீக், கம்போங் பெரா , ஜாலான் பாசிர் புவாயா என்ற இடத்தில உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் ஓராண்டு சிறை, அல்லது 2 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 326 ஆவது பிரிவின் கீழ் அந்நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








