Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது
தற்போதைய செய்திகள்

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

Share:

ஜோகூர் பாரு தாமான் மாஜு ஜெயா-விலுள்ள தங்கும் விடுதி ஒன்றில், வெளிநாட்டுப் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தொடர்பில் 19 வயது ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு 8 மணியளவில், ஜோகூர் பாருவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் துணை தலைவர் ஹூ சுவான் ஹுவாட் தெரிவித்துள்ளார்.

அந்நபரிடமிருந்து, பளுப்பு நிற டிஷர்ட், நீல நிற ஜீன்ஸ், கறுப்பு தொப்பி மற்றும் இரண்டு கைப்பேசிகள் உள்ளிட பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

குற்றப் பின்னணி எதுவும் இல்லாத அந்நபரிடம் மேற்கொள்ளப்பட்ட போதைப் பொருள் பரிசோதனையில், அவர் போதைப் பொருள் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

கொலை செய்யப்பட்ட 39 வயதான வெளிநாட்டைச் சேர்ந்த அப்பெண், உடம்பில் 12 இடங்களில் கத்திக் குத்துக் காயங்களுடன் தங்கும்விடுதியின் அறை ஒன்றில் நேற்று பிணமாகக் கண்டறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு