Jun 29, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

Share:

மலாக்கா மாநிலம், சுங்கை ஊடாங் பகுதியில் 25 வயது இளைஞரை கத்தியால் குத்திக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், இன்று முதல் ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளார்.

நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில், உயிரிழந்த இளைஞரின் வீட்டின் முன்பு, 44 வயதுடைய சந்தேக நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக நம்பப்படுகின்றது.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், சந்தேக நபர் அந்த இளைஞரைக் கத்தியால் குத்தி கொலை செய்ததாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் சுல்கைரி முக்தார் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர், தனது கைப்பேசியை அந்த இளைஞரிடம் கொடுத்திருந்ததாகவும், பலமுறை கேட்டும், அந்த இளைஞர் அதனைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அந்த கைப்பேசியை போதைப்பொருள் வாங்குவதற்காக அந்த இளைஞர் விற்றுவிட்டதாக சந்தேக நபர் நம்பியதையடுத்து, ஆத்திரமடைந்த அவர் இத்தாக்குதலை நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு