Mar 16, 2026
Thisaigal NewsYouTube
விசாரணை அறிக்கை இவ்வாரம் நிறைவு பெறும்
தற்போதைய செய்திகள்

விசாரணை அறிக்கை இவ்வாரம் நிறைவு பெறும்

Share:

Himpunan Selamatkan Rakyat எனும் பேரணி குறித்த விசாரணை அறிக்கை இவ்வாரம் நிறைவு பெற்று சட்டத் துறை அலுவலகத்திகு அனுப்பப்படும் என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லாவுதீன் அப்துல் மஜித்தெரிவித்தார்.

விசாரணைக்கு உதவும் வகையில், செகு பார்ட் என்று அழைக்கப்படும் பத்ருல் ஹிஷாம் ஷஹ்ரின் உட்பட, இது வரை 15 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்னும் அறுவரிடம் இருந்து இன்றும் நாளையும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு மிக விரைவில் விசாரணை அறிக்கை நிறைவு செய்யப்படும் என டத்தோ அல்லாவுதீன் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி 23 ஆம் தேதி, இஸ்தானா நெகாராவின் 2ஆம் நுழைவாசலில் நடைபெற்ற Himpunan Selamatkan Rakyat பேரணி Peta எனப்படும் Pembela Tanah Air செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் ஒரு அரசியல் கட்சி உறுப்பினர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் ஆதரவாளர்கள் என சுமார் 700 பேர் கலந்து கொண்டனர்.

Related News