போலீஸ் அதிகாரிகளின் சீருடையில் ஓர் அங்கமாக வகிக்க இருக்கும் கேமரா, அவர்களின் நடவடிக்கையைப் பதிவு செய்வதுடன் குற்றச் செயல்களைக் கண்டுபிடிக்கவும் உதவும் எனவும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு துறையின் இயக்குநர் டத்தோ வான் ஹாஸ்ஸான் வான் அஹ்மாட் தெரிவித்தார்.
அதிகாரிகள் இருக்கின்ற இடத்தைக் கண்டறியும் ஆற்றலைக் கொண்ட அந்தக் கேமராவில் பதிவு செய்யப்பட்ட எந்தத் தகவலும் அழிக்க முடியாத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து 8 மணி நேரம், காட்சியையும் ஓசையையும் பதிவு செய்யும் இந்தக் கேமராவை சீருடையுடன் கட்டாயம் அணியப்பட வேண்டிய ஒன்றாகப் பட்டியலிடப்படும் எனவும் டத்தோ வான் ஹாஸ்ஸான் கூறினார்,
7,648 கேமராக்களை எதிர்வரும் செப்டம்பர் முதல் போலீஸ் அதிகாரிகள் கட்டம் கட்டமாகப் பெற்று அக்டோபர் மாதம் முதல் பயன்படுத்தத் தொடங்குவர்,








