தாம் பிடிபடுவதிலிருந்து தப்பிப்பதற்காக மலாக்கா, தாமான் மலாக்கா ராயாவில் உள்ள சிக்கனக் கட்டண தங்கும் விடுதியின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார் தாய்லாந்து பெண்மணி ஒருவர்.
நேற்று மாலை மலாக்கா மாநில சுங்கத்துறை நடத்திய சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக அந்த 27 வயது பெண்மணியின் முயற்சி தோல்வி அடைந்தது என அதன் இயக்குநர் அனிர்வான் ஃபௌசி முஹமாட் ஐனி தெரிவித்தார்.
பொது மக்களிடம் இருந்து தமது தரப்பு பெற்றத் தகவலின்படி, இப்பகுதியில் விபச்சார நடவடிக்கை நடப்பதாகவும் 2 வார கண்காணிப்புக்குப் பிறகு சுங்கத்துறை களமிறங்கிய போது 15 வெளிநாட்டுப் பெண்களைக் கைது செய்ததாகவும் அனிர்வான் ஃபௌசி தெரிவித்தார்.
8 தாய்லாந்து பெண்கள், 8 இந்தோனேசிய பெண்கள், வியாட்னாம், லாவோஸ் நாட்டைச் சேர்ந்த தலா ஒருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடத்தில் முறையான பயண ஆவணம் ஏதும் இல்லை எனவும் அவர் கூறினார்,
அதே சோதனையில் 25 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்ட 17 பேர் மீது சோதனை நடத்தியதாகவும் அதில் இரண்டு உள்ளூர் ஆடவர்கள் வாடிக்கையாளர்களாக நம்பப்படுவதாகவும் அனிர்வான் ஃபௌசி கூறினார்.
வாடிக்கையாளர் பதிவு புத்தகம், கருத்தடை சாதனம், மருந்துகள் போன்றவையும் அச்சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன.
5 சம்மன்கள் வெளியிடப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 15 வெளிநாட்டுப் பெண்களும் வாடிக்கையாளர்களும் விசாரணைக்காக மலாக்கா மநில சுங்கத்துறை அலுவலகத்திற்கு வர ஆணையிடப்பட்டது.








