பொது மன்னிப்பு வாரியத்தின் அதிகாரம் மீது கேள்வி எழுப்பியுள்ள பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு கொண்டு வருவதற்கு அரச மலேசியப் போலீஸ் படை பரிந்துரைக்கவிருக்கிறது.
ஹாடி அவாங்கிற்கு எதிரான விசாரணை நிறைவுபெற்றதும், அவர் மீது குற்றவியல் சட்டம் 233 பிரிவின் கீழ் தேச நிந்தனை குற்றச்சாட்டை சுமத்துவதற்கு சட்டத் துறை அலுவலகத்திடம் பரிந்துரை செய்யப்படும் என்று போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைதீன் பிச்சை தெரிவித்துள்ளார்.
ஹாடி அவாங்கிடம் போலீசார் நேற்று வாக்குமூலம் பதிவு செய்த போது அவரிடம் முன்வைக்கப்பட்டுள்ள 24 கேள்விகளுக்கு ஐந்து கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்து இருப்பதாக அயோப் கான் விளக்கினார். எஞ்சிய கேள்விகளுக்கு நீதிமன்றத்தில் பதில் அளிப்பதாக கூறி,அவற்றுக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார் என்று துணை ஐ.ஜி.பி. அயோப் கான் விளக்கினார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


