Mar 22, 2026
Thisaigal NewsYouTube
குழந்தையை சித்ரவதை செய்ததாக கர்ப்பிணியான குழந்தை பராமரிப்பாளர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

குழந்தையை சித்ரவதை செய்ததாக கர்ப்பிணியான குழந்தை பராமரிப்பாளர் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், ஜூன் 06-

தனது பராமரிப்பில் விடப்பட்டிருந்த 17 மாதப் பெண் கைக்குழந்தையை வேண்டுமென்றே சித்ரவதை செய்ததாக எட்டு மாதக் கர்ப்பிணியான குழந்தை பராமரிப்பாளர் ஒருவர் காஜாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

24 வயது நோர் அயின் இஸ்மாயிலும் என்ற அந்த கர்ப்பிணியான குழந்தை பராமரிப்பாளர் நீதிபதி மசூலியானா அப்துல் ரஷீத் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார்.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50,000 வெள்ளி அபராதம் அல்லது 20 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 3(1)(a) பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த மே 28 ஆம் தேதி மாலை 4.15 மணியளவில் ஹுலு லங்காட், பண்டார் மக்கோத்தா செராஸ் -சில் உள்ள பதிவு செய்யப்படாத ஒரு குழந்தை பராமரிப்பு இல்லத்தில் 17 மாதப் பெண் கைக்குழந்தையின் தலைமுடியை இழுத்து மூக்கைப் பிடித்து உணவு ஊட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News