Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி முன்பு நிகழ்ந்த விபத்தில் இளைஞரின் கால் துண்டானது!
தற்போதைய செய்திகள்

பள்ளி முன்பு நிகழ்ந்த விபத்தில் இளைஞரின் கால் துண்டானது!

Share:

தெரெங்கானு, கோலா தெரெங்கானு, ஜாலான் புடிமான்-னிலுள்ள இடைநிலைப்பள்ளி ஒன்றின் முன்புற சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில், 18 வயதுடைய இளைஞரின் இடது கால் துண்டானது.

நேற்று மாலை மணி 7.16 வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், மோட்டார்சைக்கிளில் வந்திருந்த முகமது ஆதம் முக்லிஸ் அப்துல் அஜீஸ் எனும் இளைஞர் பலத்த காயங்களுக்கு இலக்கானதாக, கோலா தெரெங்கானு, உதவி ஆணையர் அஸ்லி முகமது நூர் தெரிவித்தார்.

சாலையின் இடது ஓரத்திலிருந்து, டொயோட்டா ஹிலக்ஸ் ரக வாகன ஓட்டுநர் புடிமான் சமிக்ஞையை நோக்கி யூ-டர்ன் செய்த போது, ஹோண்டா EX5 மோட்டார்சைக்கிளில் வந்த இளைஞர் அந்த வாகனத்தை மோதியது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடும் காயங்களுக்கு இலக்கான அந்த இளைஞர் பின்னர், மேல்கட்ட சிகிச்சைக்காக சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக, அஸ்லி முகமது நூர் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்