தொடக்கப்பள்ளி ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான UPSR தேர்வையும், இடைநிலைப்பள்ளிகளில் மூன்றாம் படிவ மாணவர்களுக்கான PT3 தேர்வையும் மீண்டும் அமல்படுத்துவதற்கு கல்வி அமைச்சு உத்தேசிக்கவில்லை என்று கல்வி அமைச்சர் Fadhlina Sidek இன்று தெரிவித்துள்ளார்.
தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களின் கல்வி அடைவு நிலையை மதிப்பீடு செய்வதற்கு ஓர் அளவு கோலாக பயன்படுத்தப்படும் இவ்விரு முக்கிய அரசாங்கத் தேர்வுகளும் மறுபடியும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்திய போதிலும், அதனை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான யோசனையை கல்வி அமைச்சு கொண்டிருக்கவில்லை என்று அமைச்சர் விளக்கினார்.
இவ்விரு தேர்வு முறைகளுக்கு பதிலாக பள்ளி அளவில் நடத்தப்படும் மதீப்பிட்டு தேர்வுகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும். ஒவ்வொரு துறையிலும் மாணவர்கள் கொண்டுள்ள தனித்திறனை மதிப்பீடு செய்வதற்கு பள்ளி அளவில் நடத்தப்படும் தேர்வே சிறந்த அணுகுமுறையாகும் என்று கல்வி அமைச்சு கருதுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.








