நாளை தலைநகரில் அமைந்துள்ள டாங் வாங்கி காவல் நிலையத்தில் விசாரணைக்காக 20 பேர் அழைக்கப்படவிருந்த நிலையில் அதன் எண்ணிக்கை 25 யாக உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடைப்பெற்ற மலேசியாவை காப்பாற்றுகள் கருப் பொருளைக் கொண்டு நடத்தப்பட்ட பேரணி, 2012 பேரணி சட்ட விதிமுறைகளை பின் பற்றாது நடைபெற்ற பேரணி என்பதால், அந்தப் பேரணி குறித்து விசாரணை நடத்துவதற்காக 25 பேர் அழைக்கப்பட்டுள்ளாதாக மலேசிய அரச போலீஸ்படை துணை தலைவர் டத்தோ செரி அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.
இதுவரை 22 பேரைப் போலீசார் விசாரணைக்காக தொடர்ப்புக் கொண்டு விட்டதாகவும் நாளை முதல் கட்ட விசாரணை 5 பேரிடம் நடத்தப்படும் என்றும் ஏனையவர்களை போலீசார் தேவைகேற்ற அழைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பலர் கூறிவருவது போன்று பேரணி நடத்துவதற்கு போலீஸ் பெர்மிட் தேவையில்லை என்ற போதிலும், ஏற்பாட்டு குழுவினர் போலீசாருக்கு நோட்டிஸ் அனுப்பியிருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
நோட்டிசை அடிப்படையாக கொண்டுதான் போலீசார் மற்றும் சாலை போக்குவரத்து போலீஸ் அனைவரும் சாலைகளை தடுத்து ஒதுக்கி மக்களின் பாதுகாப்ப கருதி ஒதுக்கி விட முடியும் என அயோப் கான் தெளிவுப்படுத்தினார்.








