May 22, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியரின் பணியை செய்யவிடாமல் இடையூறு விளைவித்த இருவர் கைது
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியரின் பணியை செய்யவிடாமல் இடையூறு விளைவித்த இருவர் கைது

Share:

அரசு ஊழியரின் பணியை செய்யவிடாமல் இடையூறு விளைவித்த குற்றத்திற்காக கணவனை இழந்த மனைவி ஒருவரையும் மனைவியை இழந்த கணவர் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.

நேற்று இரவு 10 மணியளவில் 45 வயதிற்கு உட்பட்ட அவ்விரு சந்தேகிக்கும் நபர்களும் போலீசாரின் குற்றத்தடுப்பு ரோந்து நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக Jempol மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Hoo Chang Hook தெரிவித்தார்.

Bahau - விலுள்ள ஒரு வங்கியின் முன்புறத்தில் உள்ள சாலையில் சந்தேகத்திற்கிடமான நிலையில் Perodua Bezza கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததை தமது தரப்பு கண்காணித்ததாக Hoo Chang Hook கூறினார்.

மேலும், காரில் தப்பிக்க முயற்சித்த அவ்விருவரையும் போலீசார் துரத்திச் சென்று கைது செய்ததாக அவர் மேலும் விவரித்தார்.சந்தேகிக்கும் ஆடவரின் மீது ஏற்கனவே 4 குற்றச்செயல்கள் இருப்பது மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட பெண் மீது 16 போதைப்பொருள் பதிவுகளும் 3 குற்றப்பதிவுகளும் இருப்பது விசாரணையில் தெரிய வந்ததாக Hoo Chang Hook குறிப்பிட்டார்.

Related News