Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஐந்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

ஐந்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிக்கப்படும்

Share:

12 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி ரொக்கப்பணம் கேட்டு மிரட்டியதாக நம்பப்படும் 5 உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிக்கப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

38 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐந்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை பெறப்பட்ட நான்கு நாள் தடுப்புக்காவல் அனுமதி, நாளை செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைகிறது.

விசாரணையை தொடர்வதற்கு ஏதுவாக அந்த ஐந்து உயர் போலீஸ் அதிகாரிகளும் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக்காவலுக்கான அனுமதி பெறப்படும் என்று டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.

தவிர இச்சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு உயர் போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இத்துடன் கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு கண்டுள்ளது என்று ஐஜிபி தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்