மூவார், மே 29-
தங்கும் விடுதி ஒன்றில் மாணவியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக பெயிண்ட் கடையின் முன்னாள் தொழிலாளி ஒருவர் மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.
19 வயது முஹம்மது ஷாருன் நிஜாம் என்கிற அந்த முன்னாள் தொழிலாளி நீதிபதி இர்வான் சுவைன்போன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார்.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஒரு பிரம்படி என்று விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 14 (a) மற்றும் 14 (d) ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்த மே 23 ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் ஜொகூர், சுங்காய் அபோங் - கில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 15 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அவ்விளைஞன் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.








