Nov 10, 2026
Thisaigal NewsYouTube

நஜிப்பை வீட்டுக் காவலில் வைப்பதில் சட்டச் சிக்கல் – உள்துறை அமைச்சர் கவலை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜிப்பை வீட்டுக் காவலில் வைப்பதில் சட்டச் சிக்கல் – உள்துறை அமைச்சர் கவலை

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கை வீட்டுக் காவலில் வைப்பது தொடர்பாக நீதிமன்ற உத்தரவும், மன்னிப்பு வாரியத்தின் உத்தரவும் வெவ்வேறு விளக்கங்களைக் கொண்டிருப்பதால் சட்டச் சிக்கல் ஏற்படக்கூடும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

எஸ்ஆர்ஸி இண்டர்நேஷனல் வழக்கில் விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்திய பின்னர், எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க நஜிப்புக்கு நிபந்தனை மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், நீதிமன்ற உத்தரவில் 'விடுவித்தல்' என்றும், மன்னிப்பு வாரியத்தின் உத்தரவில் 'வீட்டுக் காவல்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதால், உரிய தெளிவின்றி வீட்டுக் காவலில் வைப்பது சட்டவிரோத தடுப்புக் காவலாக அமையக்கூடும் என அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

மேலும், வீட்டுக் காவல் என்பது விடுதலை செய்வதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும், இந்த விவகாரத்தில் ஏதேனும் தெளிவற்ற நிலை இருந்தால் நீதிமன்றத்தின் விளக்கத்தைக் கோருவோம் என்றும் பெங்காலான் கிலிங் பகுதியில் நேற்று மீனவர்களைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இத்தகவலைப் பகிர்ந்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மலாக்கா தேர்தல் பாதுகாப்பிற்காக 3,332 போலீசார் தயார் நிலை: சுமூகமாக நடைபெற்ற முன்கூட்டியே வாக்குப்பதிவு

மலாக்கா தேர்தல் பாதுகாப்பிற்காக 3,332 போலீசார் தயார் நிலை: சுமூகமாக நடைபெற்ற முன்கூட்டியே வாக்குப்பதிவு

மொரீஷியஸ் விமான நிலையத்தில் 76 கிலோ கஞ்சாவுடன் 3 மலேசியர்கள் கைது

மொரீஷியஸ் விமான நிலையத்தில் 76 கிலோ கஞ்சாவுடன் 3 மலேசியர்கள் கைது

சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதலாக 2,500 ரிங்கிட் நிதியுதவி – அன்வார் அறிவிப்பு

சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதலாக 2,500 ரிங்கிட் நிதியுதவி – அன்வார் அறிவிப்பு

இசிஆர்எல் ரயில் சேவை டிசம்பர் 12-ஆம் தேதி தொடக்கம் – இறுதிக்கட்ட சோதனை ஓட்டம் ஆரம்பம்

இசிஆர்எல் ரயில் சேவை டிசம்பர் 12-ஆம் தேதி தொடக்கம் – இறுதிக்கட்ட சோதனை ஓட்டம் ஆரம்பம்

மின்னல் தாக்கி 16 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழப்பு

மின்னல் தாக்கி 16 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழப்பு

அமைச்சர் ரமணன் இல்லத் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு: பல இனத் தலைவர்களை ஒன்றிணைத்த ‘ஒற்றுமை மடானி’ உணர்வு

அமைச்சர் ரமணன் இல்லத் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு: பல இனத் தலைவர்களை ஒன்றிணைத்த ‘ஒற்றுமை மடானி’ உணர்வு