Nov 10, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தல் பாதுகாப்பிற்காக 3,332 போலீசார் தயார் நிலை: சுமூகமாக நடைபெற்ற முன்கூட்டியே வாக்குப்பதிவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தல் பாதுகாப்பிற்காக 3,332 போலீசார் தயார் நிலை: சுமூகமாக நடைபெற்ற முன்கூட்டியே வாக்குப்பதிவு

மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு நாளில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள மாநிலம் முழுவதும் 3,332 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை, புக்கிட் பெருவாங்கில் உள்ள மலாக்கா மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற முன்கூட்டியே வாக்குப்பதிவு நடைமுறைகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலின் போது, வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த இத்தனை போலீசார் பணியில் அமர்த்தப்படுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் பிரசாரத்துடன் தொடர்புடைய 18 வழக்குகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் தேர்தல் பிரசாரத்தின் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது சட்டம் ஒழுங்கு பாதிக்கும் சம்பவங்கள் ஏற்பட்டால் உடனடியாகச் செயல்படுவதற்குச் சிறப்புப் போலீஸ் குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாகவும், தேவைப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று டத்தோ ஸுல்கைரி முக்தார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இன்று காலை முதல் சுமூகமாக நடைபெற்று வரும் முன்கூட்டியே வாக்குப்பதிவில், 817 போலீசார் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்குத் திரும்புவதற்கு முன்பாகத் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில், பல போலீசார் முன்கூட்டியே வாக்குப்பதிவு மையத்திற்கு வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்வதாகவும் ஸுல்கைரி முக்தார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →