நேற்று பெய்த கனமழையின் போது பண்டார் பாரு சாலாக் திங்கி அருகே மரத்தடியில் ஒதுங்கியிருந்த மூன்று ஆடவர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
பழுதடைந்த காரைச் சரி செய்து விட்டு அருகிலிருந்த மரத்தடியில் ஒதுங்கிய போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் 16, 18 மற்றும் 26 வயதுடையவர்கள் என்றும், அவர்களின் சடலங்கள், பிரேதப் பரிசோதனைக்காக செர்டாங், சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூவரையும் மின்னல் தாக்கியதாகக் கூறப்படும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








