கிழக்கு கடற்கரை ரயில் இணைப்புத் திட்டமான இசிஆர்எல் ரயில் சேவையை வரும் டிசம்பர் 12-ஆம் தேதி தொடங்குவதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, எம்ஆர்எல் எனப்படும் மலேசியா ரேயில் லிங்க் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனம், நவம்பர் 7 முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரை சோதனை ஓட்டத்தை மேற்கொண்டு வருகின்றது.
அதன் படி, கோம்பாக் - கோத்தா பாரு இடையே இரு திசைகளிலும் விரைவு மற்றும் இடைநிலை ரயில் சேவைகள் சோதிக்கப்படுகின்றன.
இந்தச் சோதனையின் மூலம் ரயில்களின் இயக்கத் தயார்நிலை, சேவைத் திறன், நிலையங்களின் நிர்வாகம் மற்றும் பயணிகளுக்கான வசதிகள் ஆகியவை மதிப்பீடு செய்யப்படுவதாக எம்ஆர்எல் தெரிவித்துள்ளது.








