Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பழக்கடையில் நிகழ்ந்த வெடி சம்பவம், கவனக்குறைவு நிகழ்ந்துள்ளதா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பழக்கடையில் நிகழ்ந்த வெடி சம்பவம், கவனக்குறைவு நிகழ்ந்துள்ளதா?

கிள்ளான், ஜூன்.13-

கிள்ளான், ஜாலான் கூடாங் நெநாஸ் சாலையில் உள்ள ஒரு பழக்கடையில் நேற்று நிகழ்ந்த ரசாயனப் பொருள் வெடிப்பு சம்பவத்தில் கவனக்குறைவு எதுவும் நிகழ்ந்து இருக்குமா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எஸ். விஜயராவ் தெரிவித்தார்.

இந்த வெடிச் சம்பவம் தொடர்பில் ஆராயப்பட்டு வரும் முக்கிய அம்சங்களில் இதுவும் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தில் உயிருடற் சேதம் எதுவும் நிகழவில்லை என்ற போதிலும் இது குறித்து குற்றவியல் சட்டம் 286 ஆவது பிரிவின் கீழ் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக விஜயராவ் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →