Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்டதில் இரு இளைஞர்கள் மரணம்
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்டதில் இரு இளைஞர்கள் மரணம்

Share:

கோலா கிராய், ஏப்ரல் 26-

மச்சாங், ஜாலான் கோத்தா பாரு- கோலா கிராய்- யின் 53 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

இன்று நள்ளிரவு 12.45 மணியளவில் நிகழ்ந்த இக்கோர விபத்தில் 15 மற்றும் 20 வயதிற்கு உட்பட்ட அவ்விரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்தனர்.

கோத்தா பாரு- விலிருந்து கோலா கிராய்- யை நோக்கி பயணித்த யமாஹா Y16ZR மோட்டார் சைக்கிளோட்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்து கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளின் மீது மோதியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக மச்சாங் மாவட்ட போலீஸ் தலைவர்கண்காணிப்பாளர் அகமது ஷாபிகி ஹுசின் தெரிவித்தார்.

இதுக்குறித்து போக்குவரத்து சட்டம் 1987 -இன் 41 (1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளும்படி அகமது ஷாபிகி கேட்டுக் கொண்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்